நகரப் படலம் - 122

bookmark

122.

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண்இல் கோடியே.
 
சந்திர     காந்தத்தின் தலத்த-  சந்திர காந்த்க் கற்கள்  பரப்பிய
தரையை  உடையனவும்;  சந்தன  பந்தி செய்தூணின் மேல்- சந்தன
மரங்களான  வரிசையாக உள்ள தூண்களின் மீது;  பவளப் போதிகை-
பவளத்தால்  செய்த போதிகையில்; செந்தனி மணித் துலாம் செறிந்த-
சிவந்த  மாணிக்கத்தாலான   உத்தரம்  பொருந்திய யுள்ளனவும்;  திண்
சுவர் இந்திர நீலத்து- வண்மை மிக்க  சுவர்கள் இந்திர நீலமணிகளால்
அமைந்தனவுமான  மாளிகைகள்;  எண்ணில் கோடி-  எண்ணமுடியாத
கோடியாகும்.

சந்திர    காந்தம்: சந்திரஒளி பட நீர் பொழியும் தன்மையுடைய கல்
தலத்த,   செறிந்த  என்ற  எச்சங்கள்  தலத்தன.    செறிந்தன  என்று
பொருள் உடைய பெயர்ச்சொற்கள். பந்தி: வரிசை.                30