நகரப் படலம் - 116

bookmark

எழுநிலை மாடம்
 
116.

கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு
   அரிந்து கட்டி, மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து,
   இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடக் குயிற்றி, வாள்
   விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த
   கால் பொருந்தியே.
 
கல்     அடித்து    அடுக்கி- மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச்
சுவரெழுப்பி; வாய்ப்பளிங்கு  அரிந்து  கட்டி-  முன்புறம்  பளிங்குக்
கற்களை  அறுத்துக் கட்டி;  மீது  எல்லுடை  பசும் பொன் வைத்து-
அதன்மேலே  ஒளிவீசும்  பொன்தகடு  வேய்ந்து;  இலங்கு பன்மணிக்
குலம்   வில்லிடக்  குயிற்றி-   விளங்குகின்ற  பலவகை  மணிகளை
ஒளிவீசும்படி  (பொன்தகட்டில்)  பதித்து;  வாள்  விரிக்கும்  வெள்ளி
மாமரம்  புல்லிடக் கிடத்தி- ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன
விட்டத்தை  அதன்  மீது  பொருந்துமாறு  வைத்து;  வச்சிரத்த கால்
பொருத்தி- வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

இது     முதல் மூன்று பாடல்கள் குளகம்,     “குளகம் பல பாட்டு
ஒருவினை  கொள்ளும்”  என்றபடி  மௌலி   சூட்டி அன்னவே என்ற
மூன்றாம் பாட்டில் பொருள்முற்றுப் பெரும்.

கல்:     மணிக்கல்.    அதனைச்   செம்மையுறச்  செதுக்கிச்  சுவர்
எழுப்பப்பட்டுள்ளது.  அதற்கு முன்புறம்    பளிங்குக் கற்களை அளவுற
அறுத்துக்கட்டி அதன் மேலே பென்தகடு   வேய்ந்து அந்தத் தகட்டிலே
பலவகை    மணிகளைப்   பதித்து-      வெள்ளக்   கை   மரத்தைப்
பொருததும்படி - வைத்து வைரத்தூண் நிறுத்தி என்பது கருத்து.     24