தைலம் ஆட்டு படலம் - 1974
சுமந்திரன் திரும்பிச் செல்லுதல் (1974-1975)
இராமன் இளவலை அடக்க, சுமந்திரன் புறப்படுதல்
1974.
ஆரியன் இளவலை நோக்கி, ‘ஐய! நீ
சீரிய அல்லன செப்பல்’ என்றபின்,
பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்;
தேரிடை வித்தகன் சேறல் மேயினான்.
ஆரியன்இளவலை நோக்கி - இராமன் இலக்குவனைப் பார்த்து;
‘ஐய! -ஐயனே; நீ-; சீரிய அல்லன செப்பல்’ - சிறந்தனஅல்லாத
சொற்களைச் சொல்லாதே;’ என்றபின் -என்ற பிறகு; தேரிடைவித்தகன்
- தேர்செலுத்தலில் திறமையாளனாகிய சுமந்திரன்; பதைக்கும்
நெஞ்சினன் -துடிக்கும்மனம் உடையனாய்; பாரிடை வணங்கினன்-
நிலத்தில் விழுந்து வணங்கி; சேறல் மேயினான் -செல்லத்தொடங்கினான்.
வித்தகன் - திறமை உடையவன். இங்குத் தேரோட்டும் திறமையும்,
மந்திரித் தன்மையும்ஆம். 45
