தைலம் ஆட்டு படலம் - 1973
1973.
‘மின்னுடன் பிறந்த வாள்
பரத வேந்தற்கு, “என்
மன்னுடன் பிறந்திலென்;
மண்கொண்டு ஆள்கின்றான் -
தன்னுடன் பிறந்திலென்;
தம்பி முன் அலென்;
என்னுடன் பிறந்த யான்
வலியென்” என்றியால்.
‘மின் உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு - ஒளியுடன் கூடிய
வாளை ஏந்திய பரதசக்கரவர்த்திக்கு; ‘என் மன்னுடன் பிறந்திலென்
கொண்டு ஆள்கின்றான் தன்னுடன்பிறந்திலென் - இராச்சியத்தைக்
கொண்டு ஆளுகின்ற அரசனாகிய பரதனுடன் பிறந்தேனும்அல்லேன்;
தம்பி முன் அலேன் - தம்பியாகிய சத்துருக்கனனுக்கு அண்ணனாகவும்
இல்லேன்;என்னுடன் பிறந்த நான்; வலியன்’ - இன்னமும்
வலிமையோடுதான் இருக்கின்றேன்; என்றி - என்று சொல்லுக.’
பரதனுக்குச் சொல்லியனுப்பிய செய்தி. இலக்குவன் விரக்தி, கோபம்,
இகழ்ச்சி, அவலம் ஆகியவற்றின் உச்ச நிலையில் இருந்து பேசுகிற பேச்சாக
இது உள்ளது. தம்பியாகியசத்துருக்கனன் பரதனுடன் சேர்ந்திருத்தல்பற்றி
அவனையும் வெறுத்தான் ஆதல் அறிக. ‘ஆல்’ஈற்றசை. 44
