தைலம் ஆட்டு படலம் - 1959
1959.
‘கான்புறம் சேறலில்
அருமை காண்டலால்,
வான் பிறங்கிய புகழ்
மன்னர் தொல் குலம்,
யான் பிறந்து, அறத்தினின்று
இழுக்கிற்று என்னவோ?-
ஊன் திறந்து உயிர் குடித்து
உழலும் வேலினாய்!
‘ஊன்திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது)
உடலைத் திறந்துஉயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே!; கான்
புறம் சேறலில் அருமை காண்டலால் -காட்டின் புறத்தே செல்லுதலால்
உண்டாகும் அருமையை (துன்பத்தை) நினைத்து (நான்)திரும்புதலால்;
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் -வானளாவிய புகழ் பெற்ற
மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்; யான் பிறந்து
அறத்தினின்று இழக்கிற்று -யான் பிறந்த படியால் அறத்திலிருந்து
தவறியது; என்னவோ?’ - என்றுஎல்லாராலும்சொல்லப்படவோ.’
வனவாசத்தின்அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ்
கெடும் என்றானாம். 30
