தைலம் ஆட்டு படலம் - 1941
1941.
பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும்,
மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக,
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன,
தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார்.
அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில்
மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்; மா வகிரின்
உண்கணர் மடப்பிடியின் வைக -பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட
கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித்
தங்க; தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும்
அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்;
சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச்
செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை உடைய களிற்றியானைகள்
போல; துயின்றார் - துங்கினார்கள்.
தூ - என்பது தசை. ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல்.
‘யானைகட்கும் கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும் ஒர்
உரை “யானை சேவகம் அமைந்தது (7280)“தறிபொரு களிநல்யாதனை
சேவகம் கள்ளி” (8837) என்பன காண்க. இனிச் சேவகம் என்பது
பாதுகாவல்; வீரமறத்தொழில் குறித்து வருதலை; ‘வீரச் சேவகச் செய்கை’
(7281) என்ற பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின்
பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம். 12
