தைலம் ஆட்டு படலம் - 1936
இராமன் முனிவரொடு தங்குதல்
1936.
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று, ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்;
இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே.
இராமன் -; திருநகர்க்கு - அயோத்திக்கு; ஓசனை இரண்டு
விரைவின் சென்று -இரண்டு யோசனை தூரம் வேகமாகச் சென்று; ஒரு
விரைசெறி சோலையை - மணம்பொருந்திய ஒரு சோலையை;
எய்தினான் - அடைந்து; இரதன் நின்று இழிந்து -தேரிலிருந்து
இறங்கி; பின் - பிறகு; இன்புறும் - தன் வரவால் மகிழ்ச்சிஅடைகின்ற;
உரை செறி முனிவரோடு - மந்திரவுரையால் நிறைந்த முனிவர்களோடு;
உறையும் காலை - தங்கியிருக்கும் நேரத்தில்.
உரை செறி-புகழ் மிகுந்த என்றும் ஆம். அடுத்த பாட்டில்முடியும். 7
