தேவை இல்லாதது!

bookmark

நான் ஒரு தடவை இருபது அடி உயரமுள்ள ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்.
ஐயையோ, ரொம்பவும் அடிபட்டிருக்குமே.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே... அப்போது நான் ஏணியின் முதல் படியில்தானே இருந்தேன்.

உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.
ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு நாள் வித்தியாசம்.

நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்.
செய்வதுதானே
கை எச்சலாகிவிடுமே.

ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது, ஏன்?
ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.