தேவமாதா மன்றாட்டுமாலை

bookmark

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
கிறிஸ்துவே பிராத்தனை கேட்டருளும்
கிறிஸ்துவே தயவாய் கேட்டருளும்

விண்ணகத் தந்தை பிதாவே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
பரிசுத்த ஆவி இறைவனே - எம்மேல் இரக்கம் வைத்தருளும்

புனிதம் நிறைந்த மாமரியே
இறைவனின் புனித மாதாவே
கன்னியருள் உயர் கன்னிகையே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவை ஈன்ற மாதாவே...
திருச்சபையோரின் மாதாவே...
திருவருட் கொடைகளின் மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகா பரிசுத்த மாதாவே...
பழுதற்ற கன்னி மாதாவே...
மாசற்ற கன்னி மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னிமை வழுவா மாதாவே
பேரன்புக்குறிய மாதாவே
பெருவியப்பான மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே...
எங்கள் மீட்பரின் மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பேரறிவுடைய மாதாவே...
வணக்கத்துக்குரிய மாதாவே
துதிகளுக்குறிய மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்த மிகுந்த கன்னிகையே...
இரக்கம் மிகுந்த கன்னிகையே...
விசுவாசியான கன்னிகையே.... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தருமத்தினுடைய கண்ணாடியே...
ஞானத்தின் நல்ல இருப்பிடமே...
எங்கள் மகிழ்வின் காரணமே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானம் மிகுந்த பாத்திரமே...
மகிமை விழங்கும் பாத்திரமே...
உன்னத பக்தியின் பாத்திரமே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைபொருளான ரோஜாவே...
தாவீது அரசரின் கோபுரமே...
தந்த மயமான கோபுரமே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தங்க மயமான ஆலயமே...
வாக்குத்தத்தத்தின் நல் பெட்டகமே...
வானக எழில் மிகு வாசலே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியக் காலத்தின் விண்மீனே...
வியாதியுற்றோருக்கு ஆரோக்கியமே...
பாவிர் யாருக்கும் அடைக்கலமே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

துன்புருவோறுக்கு தேற்றரவே...
கிறிஸ்தவருடைய சகாயமே...
சம்மனசுக்களின் இராக்கினியே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிதா பிதாக்களின் இராக்கினியே...
தீர்க்கதரிசிகளின் இராக்கினியே...
அப்போஸ்தலர்களின் இராக்கினியே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சியரின் இராக்கினியே...
துதியர்களுடைய இராக்கினியே...
கன்னியருடைய இராக்கினியே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களுடைய இராக்கினியே...
பிறவிப் பாவமற்ற இராக்கினியே...
விண்ணேற்படைந்த இராக்கினியே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச் செபமாலையின் இராக்கினியே...
சமாதானத்தின் இராக்கினியே...
புனித ஆரோக்கிய மாதாவே... -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மரியே
எங்கள் பாவங்கள் பொறுத்தருளும், எங்கள் பாவங்கள் பொறுத்தருளும்

உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மரியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மரியே
எம் மேல் இரக்கம் வைத்தருளும், எம் மேல் இரக்கம் வைத்தருளும்