தேனிலவு

bookmark

"ஏன்டா... கூழைக் கரைச்சித் தண்ணிய உடம்பிலே ஊத்திக்கிட்டே குடிக்கிறே?"

"கூழானாலும் குளித்துக் குடின்னு எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்திருக்காரே!"

"உங்க கட்சியிலே இனிமே எந்தப் பிரச்சினையும் வராதுன்னு சொல்றீங்களே! எப்படி?"

"என்னைத் தவிர எல்லாரையும் டிஸ்மிஸ் பண்ணிட்டேனே!"

(திருமண வீட்டில் விழாத் தலைவர் உரையாற்றுகிறார்)

"திருமணம் என்றாலே இவ்வளவு விளக்கங்களும் அளிக்க வேண்டியுள்ளது. இப்போது முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்கிறேன்."

"மன்னிக்கணும் ஐயா, மணமக்கள் முதலிரவுக்குப் போயி ரொம்ப நேரமாச்சு...."

"நான் மணியைப் பார்க்காமலேயே ரொம்ப நேரம் பேசிட்டேன்."

"காலண்டர்லேயாவது தேதியைப் பார்த்திருக்கலாம்!"

"கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?"

"தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."