தெய்வக் குழந்தையே தேற்றும் தெய்வமே
தெய்வக் குழந்தையே தேற்றும் தெய்வமே
என்னில் வாருமே உன்னில் இணையவே (2)
அருளைத் தாருமே அன்பைப் பொழியுமே - 2
1. உந்தன் சித்தம் என்வாழ்விலே எந்நாளும மலரவேண்டுமே
உந்தன் வார்த்தை என் வாழ்விற்கு எந்நாளும ஒளியாகுமே
உந்தன் பாதையில் நான் செல்லவே
ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே (2)
2. உந்தன் வலக்கரம் பாதுகாக்கவே எந்நாளும் இருக்க வேண்டுமே
உந்தன் பணியை நாான் செய்யவே எந்நாளும் அருள் தாருமே
உந்தன் பாதையில் நான் செல்லவே
ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே (2)
