துருதுரு மகன்

bookmark

உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான். 

உங்களிடம் உதை வாங்குவதற்காக நான் இங்கே வரவில்லை.
அப்படியானால் நீங்கள் வழக்கமாக எங்கே போவீர்கள்?

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.

நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.