துன்பப்பட்ட நோயாளி

bookmark

நோயாளியை நன்கு சோதித்த டாக்டர், "உங்க உடம்பு ரொம்ப மோசமாய் இருக்கு. நீங்க நல்லா ஓய்வு எடுத்துக் கொள்ளணும். ஊட்டி கொடைக்கானல்ல போய் இரண்டு மாதம் தங்கிட்டு வாங்க. பழங்கள் காய்கறிகள் நன்றாகச் சாப்பிடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு நாளைக்கு ஒரு கிளாசுக்கு மேலே மது அருந்தக் கூடாது" என்றார்.

இரண்டு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் அந்த நோயாளி.

"இப்பொழுது எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர்".

"நன்றாகத் தேறி விட்டேன் டாக்டர். ஆனால் நீங்க சொன்னதுல ஒன்றைச் செய்யறதுதான் எனக்கு ரொம்பத் துன்பமா இருக்குது" என்றார் நோயாளி.

"என்ன அது?"

"நாள்தோறும் ஒரு கிளாஸ் மது குடிக்கச் சொன்னீர்களே. என்னால் முடியலே. குமட்டிக்கிட்டு வருது. எப்படியோ துன்பப்பட்டுக் குடிக்கிறேன்".