தீமை
பாவமே துயரத்தின் மூலம்.
தீங்கு அழையாமலே நுழையும்.
தீயார்க்குக் கருணை நல்லார்க்குக் கேடு.
(அ) பெருந்தீங்கிற்குத் தீங்கு மேலானது (ஆ) தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
தீயோரிடமும் நல்லவை உண்டு நல்லோரிடமும் தீயவை உண்டு.
சிறு தீமைக்கு இடம் கொடுத்தால் பெருந்தீமை புகுந்துவிடும்.
இரண்டு தவறுகள் ஒரு சரியாகாது. நல்லது வரும் என்று தீயதைச் செய்யாதே.
துச்சனைக் கண்டால் தூர விலகு.
சாத்தானுடன் விருந்துண்ணச் சட்டுவம் நீண்டிருக்க வேண்டும்.
பாவத்தில் வீழ்வது மனிதத்தனம் அதிலேயே தங்கியிருப்பது பேய்த்தனம்.
தீயார் நட்பு அவர் பகையினும் கொடிது. புதருக்கு விதையிட வேண்டாம்.
மோசமான காவல்காரனுக்குத் திருடன் கண்ணில் படமாட்டான்.
செல்லாக்காசு திரும்பியே தீரும். நச்சுமரம் நற்கனி ஈனாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
கெட்ட வேலி பயிரை மேயும்.
