திரு அவதாரப் படலம் - 313
இராமன் நகரத்தாரை நலம்வினாவுதல்
313.
எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயைும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
எதிர் வரும் அவர்களை- தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப்
பார்த்து; எமை உடை இறைவன் - எம்மை ஆட்கொண்ட
இறைவனாகிய ராமபிரான்; முதிர் தரு கருணையின் - முதிர்ந்த
கருணையினால் (தனது); முகமலர் ஒளிரா - மலர் போன்ற முகம்
ஒளிர; எதுவினை - எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ?;
இடர் இலை (கொல்)- துன்பமெவும் இல்லையன்றோ?; நும்மனையும்
இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ?; மதிதரு குமரரும் வலியர்
கொல் எனவே - அறிவு மிக்க பிள்ளைகள் வலிமையுடன்
வாழ்கிறார்களா? என்றெல்லாம் கேட்கவே. 132
