திரு அவதாரப் படலம் - 307
எல்லாரும் குமாரர்களைவிரும்பி அணுகுதல்
307.
அரு மறை முனிவரும்.
அமரரும். அவனித்
திருவும். அந் நகர் உறை
செனமும். ‘ நம் இடரொடு
இரு வினை துணிதரும். இவர்களின்;
இவண்நின்று
ஒரு பொழுது அகல்கிலம்.
உறை’ என உறுவார்.
அருமறை முனிவரும் அமரரும் - அரிய மறைகளில் வல்ல
முனிவர்களும் தேவர்களும்; அவனித் திருவும் அந்நகர் உறை
செனமும் - நிலமகளும். அந்த நகரத்தில் வாழுகின்ற பொதுமக்களும்;
இவர்களின் - இந்த அரசிளங் குமரரால்; நம் இடரொடு இரு
வினைதுணிதரும் - நமது துன்பங்களும் அதற்குக் காரணமான இரு
வினைகளும் துணிக்கப்படும்; இவண் நின்று - இவர்கள் இருக்கு இந்த
இடத்திலிருந்து; ஒருபொழுது அகல்கிலம் உறை - சிறிதுபொழுதும்
அகலவே மாட்டோம்; என உறுவார்; என. அப்பிள்கைளுடனே
தங்கியிருப்பார்.
அமரர்: தேவர் (அழிவில்லாதவர் என்பது பொருள்). அவனி: நிலம்.
‘’முனிவரும். தேவரும். நிலமகளும். நகரமக்களும்’ இவர்களால் நமது
இடர் தீரும்’ வினையும் நீங்கும் ஆதலால் இங்கிருந்து ஒருபோதும்
அகலோம் இவருடனே உறைவோம்’’ என்று உடன் உறைவாராயினர்
என்பது கருத்து. துணிதரும்: துணியும் இருவினை: நல்வினையும்
தீவினையுமாம். இவர்களின்: இவர்களால். அகல்கிலம்: தன்மைப்
பன்மை வினைமுற்று. உறை அகல்கிலம்: உறைவதிலிருந்து
(உடனிருப்பது). அகலமாட்டோம். முனிவர் முதலினோர் குமரரை
விரும்புதல் கூறப்பட்டது. 126
