திரு அவதாரப் படலம் - 296
296.
சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.
சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் - பரிமளப் பொடி;
தையலார் - பணிப் பெண்கள்; பந்தியில் - வரிசையில்; சிவிறி -
விசிறி; இந்திரவில் - வானவில்; பார்மிசை - தரை மேல். 115-1
