திரு அவதாரப் படலம் - 290

bookmark

முரசறையுமாறு தசரதன் கட்டளையிடுதல் (290-292)

290.

‘‘இறை தவி்ர்ந்திடுக பார். யாண்டு ஓர் ஏர்; நிதி
நிறைதரு சாலை தாள் நீக்கி. யாவையும்
முறை கெட. வறியவர் முகந்து கொள்க’’ எனா.
அறை பறை’ என்றனன் - அரசர் கோமகன்.
 
யாண்டும் ஓர் ஏழ் பார்இறை தவிர்ந்திடுக-ஏழாண்டுகள் நாட்டில்
திறை  செலுத்துவதைச்  சிற்றரசர்  தவிர்க்க;  நிதி நிறைதரு சாலை -
செல்வம்   நிறைந்த   பொருள்  பாதுகாப்பறையை;  தாள்  நீக்கி  -
தாழ்ப்பாளை   அகற்றித்   திறந்து   வைத்து;  யாவையும்  வறியவர்
முறைகெட முகந்து  கொள்க  எனா - வரன் முறையில்லாது எல்லாச்
செல்வத்தையும்.  ஏழை  எளியவர்கள் முகந்து  கொள்ளுங்கள்  என்று;
அரசர்  கோமகன்  பறை  அறை  என்றனன் -மன்னர் மன்னனான
தயரதன் பறை அறைந்து தெரிவியுங்கள் என்றான்.

இறை:     சிற்றரசர்   செலுத்தும்  கப்பம்  (மக்கள் செலுத்தும் வரி
எனவும்)   கூறுவர்.   யாண்டு:   ஆண்டு.    நிதிநிறை  தரு  சாலை:
பொக்கிஷம். முறைகெட: இன்னார் இனியார் என்ற  வரன்முறை  இன்றி
யாவரும் ஒருங்கே என்பது பொருள். வறியவர்:  வறுமையாளர்.  கொள்.
தவி்ாந்திடுக  என்பன  வியங்கோள்  வினை  முற்றுகள்.  அறை: ஏவல்
வினைமுற்று.  எனா: என்று (செயா என்ற  வாய்பாட்டு  வினையெச்சம்).
பறையறைதல்: எல்லோருக்கும் பொதுப்பட அறிவித்தல்.

பிள்ளைகள்     பிறந்த மகிழ்ச்சியால்  ஏழாண்டுகள்  திறை தவிர்க
எனவும்.  யாவையும்  முறைகெட  முகந்து  கொள்க   எனவும்  பறை
அறையுமாறு மன்னர் மன்னன் கட்டளையிட்டான் என்பது கருத்து.  110