திரு அவதாரப் படலம் - 275

bookmark

தசரதன் நீராடல்

275.

வேந்தர்கட்கு. அரசொடு. வெறுக்கை. தேர். பரி.
வாய்ந்த நல் துகிலொடு. வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி. நீர்
தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே.
 
வேந்தர்கட்கு  வரிசைக்கு   ஏற்பன  -  தனது சிற்றரசர்களுக்கு
அவரவர்  பெருமைக்கு  ஏற்றபடி; அரசொடு. வெறுக்கை. தேர். பரி
வாய்ந்த நல்துகிலொடு ஈந்தனன் -அரசும் செல்வமும். தேர்.  குதிரை
நல்ல  ஆடைகள்  ஆகிய  பலவும்  ஈந்தான்  (பின்பு).   பல்  இயம்
துவைப்ப  ஏகி  -  பலவகை  வாத்தியங்கள்  முழங்கச் சென்று; சரயு
நல்துறைக் கண் எய்தி  நீர்தோய்ந்தனன்  -  சரயு  நதித்துறையை
அடைந்து நீராடினான்.

அரசொடு.     துகிலொடு. என்பவைகளில் ஒடு ‘உம்’மைப் பொருள்
தந்து   நின்றது.   வெறுக்கை:   செல்வம்   (உயர்ந்த    ஞானிகளால்
வெறுக்கப்படுவதாதலால் இப்பெயர் வந்தது என்பார்கள்).  பரி:  குதிரை.
துகில்:பட்டாடை.     வரிசை    முறை    துவைத்தல்:     அடித்தல்
(தொழிற்பெயர்).   ‘துறைக்கண்’   இதில்   கண்   ஏழாம்  வேற்றுமை
இடப்பொருள்.   வேள்வி   நிறைவேறியவுடன்   அரசர்.    அந்தணர்.
பணியாட்கள்   ஆகியோருக்கு  அவரவர்  தகுதிக்கேற்ப.   சன்மானம்
வழங்கி.   பிறகு  நீராடி.  புத்தாடை  உடுத்து.  ஆசியும்   பிரசாதமும்
பெறுதல்  மரபு  என்பதால்  தயரதன்  சரயு  நதிக்கு நீராட  ஏகினான்
என்றார். நீர் தோய்தல்: நீரில் மூழ்குதல் (தோய்தல்: தொழிற்பெயர்)  95