திரு அவதாரப் படலம் - 250
250.
நல் தவம் அனைத்து.
ஓர் நவை இலா உருப்
பெற்று. இவண் அடைந்தெனப்
பிறங்குவான்தனை.
சுற்றிய சீரையும்.
உழையின் தோற்றமும்.
முற்று உறப் பொலிதரு
மூர்த்தியான்தனை.
நல் தவம் அனைத்தும் ஓர்- நல்ல தவங்கள் அத்தனையும்
சேர்ந்து ஒரு; நவை இலா உருப்பெற்று - குற்றமற்ற வடிவத்தைத்
தாங்கி; இவண் அடைந்த என - இங்கே அடைந்துள்ளது என்று
கூறும்படி; பிறங்கு வான் தனை - விளங்குகின்ற தொரு
பெருமையுடையவனை; சுற்றிய சீரையும் - இடுப்பைச் சுற்றி
அணிந்துள்ள மரவுரியையும்; உழையின் தோற்றமும் - மானைப்
போன்றதொரு தோற்றமும்; முற்றுறப் பொலிதரு மூர்த்தியான்
துணை- முழுதும் பொருத்தமுற விளங்குகின்ற வடிவம் கொண்டவனை.
அடுத்த பாட்டுடன் பொருள் முடிவு பெறுவதாதலின் இது குளகம்.
பிறப்பு. உறுப்பு. தொழில். தோற்றம் இவைகளால் பெருமை மிக்க தவ
முனிவன் என்பது இப்பாடல்கள் கூறும் சிறந்த பொருளாகும்.
நன்மை+தவம்: நற்றவம். பண்புத்தொகை. உழை: மான். பிறங்குதல்:
பொலிதல். முற்றுறப் பொலிதரல்: அகமும். புறமும் ஒத்துப் பொலிதல்.
மூர்த்தம்: வடிவம் (உருவம்). எனவே வடிவத்தை உடையவன் என்பது
பொருளாகும்.
இந்தப் பாடலும். அடுத்த பாடலும் கலைக்கோட்டு முனிவரின்
அரிய தோற்றத்தை விவரிப்பதாகும் 71
