திரு அவதாரப் படலம் - 233
233.
‘அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி. வேறு
உரைக்குவது இலது என உவந்து. தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முகநலாள்தனை.
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்
வேறு உரைக்குவது இலதென- (முனிவனை ஆசனத்தில் அமரச்
செய்த பின்னர்) இனி வேறு உரைப்பதற்கு எதுவுமில்லை என்னும்படி;
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி - அருக்கியம் கொடுத்தல்
முதலான கடமைகள் பலவும் செய்தளித்து; தான் அருள் முருக்கிதழ்
சாந்தையாம் முக நலாள் தனை - மன்னன் தான் பெற்ற முருக்கம்
பூப் போன்ற இதழ்களையுடைய சாந்தை என்னும் அழகிய
பெண்ணரசியான தன் மகளை; இருக் கொடு விதிமுறை - வேத
நெறிப்படி இருக்கு முதலான வேதமந்திரங்களைக் கூறி; இனிதின்
ஈந்தனன் - இனிமையாக மணம் செய்து கொடுத்தான்.
அருக்கியம்: பதினாறு வகை உபசாரங்களில் முதன்மையானது.
கைகழுவ நீர் தருதல் முதலியனவாம். கடன்: கடமை. ஆற்றுதல்:
செய்தல். உரைக்குவது: உரைப்பது. சாந்தையை இம்மன்னன்.
தயரதனிடமிருந்து பெற்று வளர்த்து வந்தான் என்பது வான்மீகம்
கூறும் கருத்தாம். நலாள்: நல்லாள் தொகுத்தல் விகாரம். 54
