திரு அவதாரப் படலம் - 231
231.
‘அருள் சுரந்து. அரசனுக்கு ஆசியும் கொடுத்து.
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி. நல்
பொருள் தரும் முனிவரும் தொடரப் போயினான்-
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன்.
அருள் சுரந்து- (உள் எழுந்த சினம் நீங்கிய அம்முனிவன்)
அருளைச் சுரந்து; அரசனுக்கு ஆசியும் கொடுத்து - அந்த
வேந்தனுக்கு ஆசியும் கூறி; உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி-
உருண்டு செல்லும் தேரின் மீது விரைந்தேறி; நல்பொருள் தரும்
முனிவரும் தொடர - நல்ல கருத்துகளையே எப்போதும் தரும் மற்ற
முனிவர்களும் பின்வர; மருள் ஒழி உண்ாவு உடை - மயக்கம் நீங்கிய
நல்லுணர்வுடைய; வரத மாதவன் போயினான் - யாவருக்கும் வரந்தர
வல்ல தவத்தையுடைய கலைக்கோட்டு முனிவன் சென்றான்;
போயினான்: நகரை நோக்கிச் சென்றான். சினம் நீங்கி உண்மையை
உணர அருள் பெருகும் என்பதால் “அருள் சுரந்து” என்றான்.
ஆசியும் என்பதில் உள்ள “உம்” எண்ணுப் பொருள் தந்து நின்றது. 52
