திரு அவதாரப் படலம் - 206
206.
வாயு. ‘மற்று எனது கூறு மாருதி’ எனலும் மற்றோர்.
‘காயும் மற்கடங்கள் ஆகி. காசினி அதனின்மீது
போயிடத்துணிந்தோம்’ என்றார்; புராரி. ‘மற்றுயானும்
காற்றின்
சேய் எனப்புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு
அவதிஉண்டோ.
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் - காற்றுத் தேவனான
வாயு எனது அம்சம் மாருதி என்று சொல்லலும்; மற்றோர் காயுமற்
கடங்களாகி காசினி அதனின் மீது போயிடத் துணிந்தோம்
என்றார் - மற்ற தேவர்கள் எல்லோரும் பகைவரைச் சினக்கும்
வானரங்கள் ஆகி. பூமியிலே சென்று பிறக்க முடிவு செய்துவிட்டோம்
என்றார்கள்; புராரி மற்று யானும் காற்றின் சேய் எனப் புகன்றான்-
திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப்
பிறக்கிறேன் என்று கூறலானான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி
உண்டோ- எனவே. மற்றுமுள்ள எல்லாத்திசைகளிலும் வாழ்பவர்க்கும்
எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).
மருந்து: காற்று மருத்தின் மகன் மாருதி (அனுமன்). புராரி:
திரிபுரத்தை அழித்தவரான சிவபிரான். காற்று எனது அம்சம் என
அனுமன். மற்றத் தேவர்கள் எல்லோரும் வானரங்களாகப் பிறக்க
நாங்கள் முடிவெடுத்து விட்டோமென. சிவபிரான் தானும் காற்றின்
சேயான அனுமனாய் அவதரிப்பதாகக் கூறினார் என்பது கருத்து.
அவதி: வருத்தம் (துன்பம்) எனவே. இனிஎங்கு வாழ்பவர்களுக்கும்
எந்தத் துன்பமும் இல்லையாம் என்றார்.
காசினி: உலகம். மற்கடம்: குரங்கு காய்தல்: சினத்தல். போய்+ இட:
போயிட. “இட” என்ற துணை வினை எதிர்காலம் உணர்த்தி நின்றது.
போக என்பது பொருள். 27
