திருமங்கையாழ்வார்

bookmark

~~page_heading~~திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர் ஆவார். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழ மன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

திருமங்கை ஆழ்வாரின் (வைணவ)க் காதல் ஒரு பார்வை:-

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின் படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

திருமங்கையாழ்வார் அவர்களின் இலக்கியப் பணி :-

இவர் 1351 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன:-

•     திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)

•     சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)

•     பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)

•    திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)

•     திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)

•    பெரிய திருமொழி (1084 பாடல்கள்)