திருப்பாடல் 89
ஆண்டவரின் பேரன்பை நான், என்றென்றும் பாடுவேன்
1. என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடிப்பேன்
என் திருதைலத்தால் அவனுக்கு திருப்பொழிவு செய்வேன்
என் கை எப்போதும் அவனோடு இருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப் படுத்தும் -பல்லவி
2. என் வாக்கு பிறலாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்
என் பெயரால் என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்
நீரே என் தந்தை என் இறைவன் என் மீட்பின் பாறை
என்று அவன் என்னை அழைப்பான்
நீரே என் தந்தை என் இறைவன் என்று அவன் என்னை அழைப்பான் -பல்லவி
