தாடகை வதைப் படலம் - 400

bookmark

விசுவாமித்திரர் மேலும் சில கூறுதல்

400.    

‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.
 
மன்னர்  மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று - இன்னும் ஒன்று;
உரைக்கின்றது  -  சொல்லுவது;  ஓதல்  -  கூறுதல்;  ஈறுஇலான் -
முடிவில்லாதவன்.                                          39-1