தாடகை வதைப் படலம் - 383
மக்களைப் பிரிந்த தாடகை இங்கு வசிக்கின்றாள் எனல்
383.
‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள். - அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.
மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா - நீங்காத; சலம் - சினம்;
வகுந்துவின் - வழிவழியாக; வசுவரி - வசுக்களின் தலைவனான
இந்திரனது குற்றக் குறி; வதிந்தது - தங்கியது; அழல் - நெருப்பு. 20-18
