தாடகை வதைப் படலம் - 382

bookmark

சுபாகு மாரீசர்கள் இராவணனுக்கு மாமனாய்
உலகிற்குத் தீமை புரிதல்

382.    

‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ.
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள்.
 
அநேக     நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் - தவம்;
தசமுகன்  -  இராவணன்; மாதுலர் - மாமன்மார்; பவனன் - சூரியன்;
திரிகுநர் - திரிபவர்கள்; பதகி - பாதகி (தாடகை).             20-17