தாடகை வதைப் படலம் - 381
சுபாகு மாரீசர்கள் சுமாலியோடு உறவு கொள்ளுதல்
381.
‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்.
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர்.
வெகுளி- சினம்; அறைந்த - கூறிய; தருக்கு - வலிமை; நேர்ந்து
- அடைந்து; நிற்கு - உனக்கு; கூர்ந்தனர் - அணுகினர். 20-16
