தாடகை வதைப் படலம் - 380
தாடகைமுதலியோர் அரக்கராதல்
380.
‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.
வெருக்கொள - அஞ்ச; முருக்கி - அழித்து; உழலும் - திரியும்;
உருக்கிய செம்பு - உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் - உமிழ்கின்ற
கண். 20-15
