தாடகை வதைப் படலம் - 379
அகத்தியன் சபித்தல்
379.
‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.
அளப்ப அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் - தந்த
அகத்தியன்; கனல் உமிழ் - நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து -
ஊங்காரம் செய்து; இழிக - இழிந்தவர்களாகுக; அசனி - இடி. 20-14
