தாடகை வதைப் படலம் - 370
பிரமன் வரங்கொடுத்து மறைதல்
370.
‘ “பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.
பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் - ஒக்கும்;
பொற்பு - அழகு; மதமலை - மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு -
ஆயிரம்; வலி - வலிமை; தனயை - மகள்; மலர் அயன் -
பிரமன். 20-5
