தலைமறைவு

bookmark

1. "என்ன கபாலி.... போட்டோவுல உன் மாப்பிள்ளை முதுகைக் காட்டிக்கிட்டு நிக்கறாரு?" 

"மாப்பிள்ளை இப்ப "தலைமறைவா" இருக்காரு ஏட்டய்யா!"

ப.உமாமகேஸ்வரி

2. "படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன செய்யணும்...?"

"படிப்புதான் வரல, தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!

கே.ராஜு

3. "எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி..."

"எப்படி...?"

"அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!"

எம்.செந்தில்குமார்
4. "பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"

"குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"

என்.பர்வதவர்த்தினி

5. "தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"

"அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"