டெலிவரி

bookmark

திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே.....

திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல... அப்ப பார்த்துக்கலாம்.

காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க.. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க....

காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க.... 

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!

"தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க... நீங்க இப்படி சிரிக்கிறீங்களே...?"

"தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு...!"

சேவகன் 1: மன்னர் ஏன் டயர்டா இருக்கார்?

சேவகன் 2: அந்தப்புரப் பெண்களின் புடவைகளையெல்லாம் துவைத்தது அலுப்பாயிருக்காதா?

டீச்சர்: முதல் மாசம் ஜனவரி!
ரெண்டாவது மாசம் பிப்ரவரி!
அப்போ.. பத்தவது மாசம் என்ன?

மாணவன்: 'டெலிவரி' டீச்சர்!