டாக்டர் சொன்னால்...

bookmark

ஒருவன் உயரமான மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அவனை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, "அவன் இறந்து விட்டான்" என்றார்.

ஆனால் அடிபட்டவனோ தன் கண்ணை விழித்துப் பார்த்து "நான் இறக்கவில்லை டாக்டர், உயிரோடு தான் இருக்கிறேன்" என்றான்.

அங்கிருந்த அவன் மனைவி, "வாயை மூடுங்கள், டாக்டருக்குத் தெரியாதது உங்களுக்கு என்ன தெரியும்?" என்று அதட்டினாள்.