ஜேம்ஸ் போக்

ஜேம்ஸ் போக்

bookmark

ஜேம்ஸ் போக் நவம்பர் 2 1795 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார். எனினும், பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத் தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839).  ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரிட்டன் இடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார். இவர் ஜூன் 15 1849 ஆம் ஆண்டு இறந்தார்.