ஜார்ஜ் வாசிங்டன்

ஜார்ஜ் வாசிங்டன்

bookmark

ஜார்ஜ் வாசிங்டன், 22 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1732 ஆம் வருடம் பிறந்தார். இவர் தான் இன்றைய அமெரிக்காவின் அஸ்திவாரத்தை போட்டவர். இவர் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுகின்றனர். இவர் டிசம்பர் 14, 1799 ஆம் ஆண்டு மறைந்தார்.