ஜனவரி - 14
மனைவியை தொலைத்த ரெண்டு நபர்:
"உங்க மனைவி எப்படி இருப்பாங்க?"
"ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா."
"உங்க மனைவி?"
"அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்...."
நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர்: கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்....
பிச்சக்காரன்: 'பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்' என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன்: பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சக்காரன்: அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..
"ஜனவரி - 14க்கும், பிப்ரவரி - 14க்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி - 14! அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14!"
மனைவி: என்னங்க! நான் வெச்ச பொங்கல் எப்படி இருக்கு...?
கணவன்: ம்ம்... இன்னும் கொஞ்சம் ஊத்து....!
