செருத்துணை நாயனார்

bookmark

சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு பக்தியுடன் செய்து வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத் தேவி (அதாவது பட்டத்து அரசி) அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப் பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார்.  இவ்வாறு திருத்தொண்டு பல செய்து சிவனடி நீழலில் சேர்ந்து இறுதியில்  முக்திபெற்றார்.

செருத்துணை நாயனாரின் மேற்கண்ட கதையில் உணர்த்தப்படும் நுண்பொருள்கள்:-

1.    பூஜைக்கு உரிய பொருள் புனிதமானது.

2.    அதனைக் கடப்பதும் மோப்பதும் ஆகிய கருமங்களால் எச்சிப்படுத்துவது சிவநிந்தை.

3.    இத்தகைய சிவநிந்தை செய்வோர் எத்தகையோராயினும் தக்க முறையில் தண்டிக்கப்படுதற்குரியர்.

செருத்துணை நாயனார் குருபூசைநாள்: ஆவணிபூசம் என்று சொல்லப்படுகிறது.