சுப்பிரமணிய பாரதியார் புதிய ஆத்திசூடி
ஆசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
புதிய ஆத்திசூடி ஒரு தமிழ் நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திச்சூடியைப் போன்றே நல்ல அறிவுரைகளுடன் சுப்பிரமணிய பாரதியாரால் 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆத்திச்சூடியைப் போன்றே இதன் அமைப்பு உள்ளது. மொத்தம் 109 அறிவுரைகள் உள்ளன. இவை எளிதில் மனப்பாடம் செய்து கொள்ளும் சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்துள்ளன.
