சிறுமலரே சின்ன ராணியே சிறுவழி தந்தவளே (என்)
சிறுமலரே சின்ன ராணியே சிறுவழி தந்தவளே (என்)-2
உன் நறுமணம் கமழ்ந்திடும் நானிலமெங்குமே
நல்வழி தந்தவளே குழந்தை தெரசாளே
1. பணிபெற விரும்பவில்லை நீர் பயன்பெற நினைத்ததில்லை -2
உம் பாசத்திற்களவில்லை
உம் பெருந்தன்மைக்கெல்லையில்லை - 2
பாடும் மனமே தேடும் தினமே
பிறர்நலம் பேணும் பேரன்பினையே
2. சிறுசிறு செயல்களையே நீர் செம்மையாய்ச் செய்தாயே - 2
உம் குழந்தை உள்ளமே பல குறைகளைப் போக்கிடுதே - 2
தூய நெறியை துன்பங்கள் வழியில்
துணிவுடன் துலங்கிட செய்த நீ வாழி
பீஏ சூஞூலுநிஏயூடி
