சிறந்த கதாசிரியர்
"முதலிரவில் கணவன்: ஹய்யா. நான் உங்கப்பாவை நல்லா ஏமாத்திட்டேன். நான் உண்மையிலேயே பேங்க் மேனேஜர் இல்லே தெரியுமா?
அதற்கு மனைவி: அப்படியா? அதனாலென்ன எங்கப்பா போட்ட நகைகளும் ஒரிஜினல் தங்கம் இல்லியே!"
"உங்க மனைவிக்குப் பேச்சு வரலையேன்னு டாக்டர் கிட்ட கூப்பிட்டுப் போய் காண்பித்தாயா?"
"ஆமாம். டாக்டரிடம் அப்படியே பேச்சு வராமலிருக்க தொடர்ந்து சிகிச்சை பண்ணச் சொன்னேன்."
வேலைக்காரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது மனைவியின் இடுப்பில் கிள்ளிவிட்டார் முதலாளி...
முதலாளி அம்மா: உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது ஆள் இருக்கிற நேரத்தில இப்படிச் செய்யாதீங்கனு...
வேலைக்காரி: நல்லாச் சொல்லுங்கம்மா, நானும் எத்தனையோ தடவை அவர்கிட்ட சொல்லிட்டேன்.
முதலாளி அம்மா: என்னது உன்னையுமா....???
டாக்டர்: நல்லா மனசு விட்டு சிரிங்க.. எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருந்தா நோயே வராது தெரியுமில்லே.
நோயாளி: தெரியும் டாக்டர். ஆனா இன்னும் ரெண்டு மாசத்திலே எனக்கு கல்யாணமாச்சே.
நிருபர்: சிறந்த கதாசிரியருக்கான விருது வாங்கியிருக்கீங்களே, உங்களுக்கு எப்படி இதுமாதிரியான கதையெல்லாம் எழுத முடிஞ்சுது?
கதாசிரியர்: கொஞ்சம் இருங்க எழுதினவரைக் கேட்டு சொல்லுறேன்.
