சர்ட்டிபிகேட்

bookmark

"டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?"

"அவரோட டெதஸ்கோப்பே இருக்கு சார்!!"

"டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே... இதையேன் பெரிசா சொல்றீங்க...?"

"அட! நீங்க ஒன்னு கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க.!"

"அந்த அரசு விழாவிலே என்ன கசமுசா?"

"மத்திய மந்திரியை ஒரு மூலையிலே உக்கார வச்சிட்டாங்களாம்."

"மனைவிக்கு அஞ்சாத மாவீரர் சங்கத்திலே இருந்து ஏன் விலகிட்டீங்க...?"

"என் மனைவி மிரட்டல் பொறுக்க முடியல்லே!"

"என் வீட்டுக்காரர் ராத்திரி தூங்கப் போகும்போது காசு வாங்கி முந்தியிலே முடிஞ்சுக்குவாரு."

"ஏன்?"

"அவருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதியாச்சே... போகிற பாதையிலே டீ குடிக்கத்தான்!"