சபரி மோட்சம்

bookmark

இராமரைக் கண்டு உயிர் துறக்கும் எண்ணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சபரி, மதங்க மலையில் இராமரின் வருகைக்காக காத்திருந்தாள். சீதையைத் தேடி இராமனும், இலக்குமணனும் தேடி அலைந்த வேளையில், மதங்க மலையில், சபரியின் ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு சபரி அளித்த இலந்தைப் பழங்களை இராமர் உண்டு, வயதான சபரிக்கு மோட்சம் நல்கினார்.