சத்தி நாயனார்
சோழ நாட்டில் வரிஞ்சை என்னும் ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு தொண்டு செய்வதில் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்தார். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ் துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற் பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து இறுதியில் சிவன் திருவடி சேர்ந்தார். இதுவே சத்தி நாயனார் பற்றி நாம் அறியும் சிறு குறிப்பு ஆகும்.
