கோடீஸ்வரன்
"அம்பது ரூபாய்க்குச் சில்லறையாய்ப் பத்து ரூபாய்த் தாளு கொடுங்களேன்."
"அம்பது ரூபாய்த் தாளை அஞ்சாய்க் கிழிச்சிக்க வேண்டியது தானே?"
"எல்லோரும் சமம் என்பது எங்கேயும் கிடையாது! சுத்தப்பொய்!"
"விவரமாச் சொல்லு!"
"செருப்பும் 100 ரூபாய்! தொப்பியும் 100 ரூபாய்! செருப்பைக் காலில் போட்டு மிதிக்கிறாங்க? தொப்பியைத் தலையில் வச்சுக் கொண்டாடுறாங்களே?"
"ஏனுங்க? லட்சத்துக்கு எத்தனை சைபரு?"
"அது தெரிஞ்சா நான் ஏன் கோடீஸ்வரனா இருக்கேன்?"
"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"
"பேய்க்கதை படிச்சா... அன்னிக்கு குக்கர் கிட்டே போக மாட்டேன்!"
"பேய்க்கும் குக்கருக்கும் என்ன சம்பந்தம்?"
"குக்கரிலே ஆவி கூச்சல் போட்டுக்கிட்டுப் பயமுறுத்துதே!"
