கைரேகை ஜோசியம்

bookmark

1. "குடிக்காம தெளிவா இருக்கும் போதுதான் இவர் தப்பே செய்யறார்..." 

"எப்படி..?"

"குடிக்கணும்னு அப்பதானே முடிவெடுக்கறார்!"

ஏ.நாகராஜன்

2. "போலீஸ் செலக்சன் முடிஞ்சப்புறம் எதுக்கு வந்தே...?"

"எல்லாம் முடிஞ்சப்புறம் வந்தாதானே சார் போலீஸ்...!"

சரவணன்

3. "நமது மன்னர் போரிலிருந்து வருவதற்கும், பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!"

"என்ன அது?"

"போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்; பாரிலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!"

கே.ஆனந்தன்

4. "அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."

"ஏன்...?"

"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

வி.சாரதிடேச்சு.

5. நோயாளி: ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?!

டாக்டர்: ஆபரேஷன் பண்ணித்தானே நான் பிழைக்கிறேன்!

Read to next Story