கையடைப் படலம் - 333
தசரதன் அழைக்க இராமன் வருதல்
333.
குருவின் வாசகம்
கொண்டு. கொற்றவன்.
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்.
சென்று’ என.-
‘வருக என்றனன்’
என்னலோடும். வந்து
அருகு சார்ந்தனன்.
அறிவின் உம்பரான்.
குருவின் வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது
சொற்களைச் செவியேற்றுக் கொண்டு; கொற்றவன் - மன்னனாகிய
தயரதன் (பக்கத்திலுள்ள பணியாட்களைப் பார்தது); திருவின்
கேள்வனை - (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான)
ராமபிரானை; கொணர்மின் சென்று என - சென்று அழைத்துக்
கொண்டு வருக என்று சொல்ல; வருக என்றனன் - (பணியாட்கள்
சென்று ராமனை அடைந்து) தந்தை வருக என
அழைத்தார்;என்னலோடும் - என்று சொல்லவே; அறிவின் உம்பரான்
- அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன்
- புறப்பட்டு வந்து. மன்னனருகில் சேர்ந்தான்.
குரு: குல குருவாகிய வசிட்டன். வாசகம்: சொல் (பேச்சு). கொண்டு:
ஏற்றுக்கொண்டு. கொண்மின்: அழைத்துவாருங்கள் ‘கொணர்மின்’
என்றதால் ஏவப்பட்டோர் பலர் என்பது புலனாம். வருக: வியங்கோள்
வினைமுற்று. சார்தல் - சேர்தல் உம்பர் தலைமை அறிவின்
உம்பரான்: மேலான அறிவுடையவன் ‘ஞான நாயகன்’ என்னலுமாம். 17
