கையடைப் படலம் - 322
தசரதன் முனிவற்கு இருக்கை ஈந்து
வழிபட்டு இன்மொழி கூறல் (322-323)
322.
பணிந்து. மணி செற்றுபு குயிற்றி
அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு. இனிது
அருத்தியொடு இருத்தி.
இணைந்த கமலச் சரண் அருச்சனை
செய்து. ‘இன்றே
துணிந்தது. என் வினைத் தொடர்’
எனத் தொழுது சொல்லும்.
பணிந்து - (தயரத மன்னன் முனிவனை) வணங்கி; மணி செற்றுபு
குயிற்றி அவிர் பைம்பொன் அணிந்த தவிசு இட்டு அருத்தியொடு
இனிது இருத்தி - மணிகள் நெருங்கப் பதித்து விளங்கும் பொன்னால்
அலங்கரிக்கப்பட்ட ஆசனமிட்டு (அதில்) மிக்க ஆர்வத்துடன்
முனிவனை இனிதே இருக்கச் செய்து: இணைந்த கமலச் சரண்
அருச்சனை செய்து - தாமரை போன்ற இரு பாதங்களையும்
அருச்சித்து: என் வினைத் தொடர்பு - எனது வினைப்பயன்களின்
தொடர்பு; இன்றே துணிந்தது என - இன்றே நீங்கியது என்று;
தொழுது சொல்லும் -அம்முனிவனை வணங்கிக் கூறலானான்.
செற்றுபு: நெருங்க. குயிற்று: பதித்து. பைம்பொன். (பண்புத்தொகை);
பசுமையான பொன். தவிசு: இருக்கை. அருத்தி: ஆசை. சரணம்:
பாதம். அருச்சனை: பூசனை. வினைத்தொடர்பு: வினைப்பயன்
இருத்தி: பிறவினை. இருவினைப் பலன்களும் ‘ஆம்’ நல்வினையும்
பிறவிக் காரணம் என்பதால் ‘ இருள் சேர் இருவினை’ என்றார்
திருவள்ளுவரும். பெரியோர் வருகையால் வினைத் தொடர்புகள்
நீங்கும் என்பது கருத்து. 6
