கூட்டணி
"ஜனங்கள்ல இன்னும் நிறைய பேர் ஏமாளியாதான் இருக்காங்கன்னு எப்படிய்யா சொல்றே...?"
"இந்தத் தேர்தல்லயும் உங்களுக்கு ஆயிரத்து சொச்சம் ஓட்டு போட்டிருக்காங்களே தலைவரே!"
"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு."
"என்ன பண்றாரு?"
"சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"
"பதவி பெரிசா.... குடும்பம் பெரிசான்னு தலைவர்கிட்ட கேட்டதுக்கு, என்ன சொன்னார்?"
"பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெரிசுன்னு சொன்னார்!"
"தலைவர் ரொம்பத்தான் பயந்து போயிருக்கார்!"
"எப்படிச் சொல்றே?"
"நல்லா இருக்கீங்களானு விசாரிச்சாகூட, நான் எந்தத் தப்பும் பண்ணலைங்கறார்!"
"மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!"
"ஏன்... என்ன ஆச்சு...?"
"தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"
